Best Placements in 8 Consecutive Years

முத்தமிழ் மன்றம்

தமிழ் உலகின் பாரம்பரிய மொழிகளில் ஒன்று. தமிழ் மொழி உலகின் புகழ்மிக்க பாரம்பரிய இலக்கியங்களை கொண்ட மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 22 இந்திய மொழிகளில் தமிழ் ஒன்று மற்றும் 2004 ல் இந்திய அரசால் முதல் பாரம்பரிய மொழியாக அறிவிக்கப்பட்டது. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி”-நம் தாய்மொழியாம் தமிழை பேணிகாக்கும் பொருட்டும், நவீன தொழில்நுட்பங்களை தமிழ்மயமாக்க மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம்- முத்தமிழ் மன்றம் 18.02.2015 அன்று துவங்கப்பட்டது.

மன்றத்தின் நோக்கங்கள்

  • தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளுதல்.
  • தமிழாய்வினை வளர்த்தல் மற்றும் இணையவழிஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • தமிழ் சார்ந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்தல் .
  • மாணவர்களிடையே தமிழ் தொடர்புடைய அறிவுசார் திறன் மேம்பாட்டை வளர்த்தல்
  • பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களை தமிழ் வழியில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள தேவையான பயன்பாட்டு இடைமுகப்பை வழங்குவது.
  • பொறியியல் சார்ந்த அடிப்படை சாரசம்களை தமிழ் மூலம் கற்பிக்க உதவும் மையமாக திகழ்வது.

முத்தமிழ் மன்றம் செயல்பாடுகள்

திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி கணினி துறையின் தமிழ் மன்றம் மற்றும் தர்மபுரி பண்பலை வானொலி நிலையம் இணைந்து நடத்திய "தனி மனித சுகாதாரமின்மைக்கு காரணம் - அலட்சியமே?அறியாமையே?" என்ற தலைப்பில் மாணவர் விழிப்புணர்வு பட்டிமன்றம் 05.03.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. திரு.அசோக் சிலம்பன், மருத்துவர், சரவணா மருத்துவமனை, சேலம் நடுவராக செயலாற்றி அறியாமையே என்ற நல்ல தீர்ப்பை வழங்கினார்.

அறியாமையே என்ற அணியில் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அலட்சியமே என்ற அணியில் தர்மபுரி பண்பலை வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர். பட்டிமன்றம் இனிதே நிறைவடைந்தது. பட்டிமன்றத்திற்கான ஏற்பாடுகளை கணினி துறைத்தலைவர் முனைவர். சரவணன் அவர்களின் வழிநடத்துதலின் பேரில் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.விஜய் மற்றும் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. விமலா செய்திருந்தனர்.


தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம் (முத்தமிழ் மன்றம்) வழங்கிய மாபெரும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி 03/02/18 அன்று நடை பெற்றது. 150 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள்:

    பேச்சுப் போட்டி:
  • முதல் பரிசு : ச.வினோதினி, IV/CIVIL
  • இரண்டாம் பரிசு : கா. ப்ரியங்கா, II/ECE
  • மூன்றாம் பரிசு : சே. கௌதமன், III/EEE

கவிதைப் போட்டி:

  • முதல் பரிசு : அ. கார்த்திகா, III/CSE
  • இரண்டாம் பரிசு : சு. கோமளாதேவி, III/EEE
  • மூன்றாம் பரிசு : செ. தமிழ்செல்வன், III/EEE

கட்டுரைப் போட்டி:

  • முதல் பரிசு : கோ. ஹரி கிருஷ்ணமூர்த்தி, III/EEE
  • இரண்டாம் பரிசு : சி. வசந்தி, II/ECE
  • மூன்றாம் பரிசு : ச. சுஜிதா, II/EEE



கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை & தமிழ் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு இணையம் (முத்தமிழ் மன்றம்) இணைந்து வழங்கிய மாபெரும் பேச்சுப் போட்டி & கவிதைப் போட்டி 13.01.2016 அன்று நடை பெற்றது. 100 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள்:

    பேச்சுப் போட்டி:
  • முதல் பரிசு : மதுவந்தி, I/ECE
  • இரண்டாம் பரிசு : ஜோதி பிரியங்கா, I/ECE
  • மூன்றாம் பரிசு : கவின், I/CSE
  • ஆறுதல் பரிசு : அருண், I/CSE

கவிதைப் போட்டி:

  • முதல் பரிசு : கார்த்திகா, I/CSE
  • இரண்டாம் பரிசு : லோகநாதன், I/EEE
  • மூன்றாம் பரிசு : நிரூபன், I/CIVIL
  • ஆறுதல் பரிசு : உதயமூர்த்தி, I/MECH

அமைப்பாளர்கள் - முத்தமிழ் மன்றம்

அமைப்பாளர்
ப.விமலா
உதவி பேராசிரியை/கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி

Quick Links
  Geo Location
  Contact Us

Dhirajlal Gandhi College of Technology

TNEA Code : 2345

Opposite Salem Airport, Sikkanampatty (po),

Omalur (Tk), Salem - 636 309.

Contact : +91 9500000651,+91 9489900130
Mail : principal@dgct.ac.in, office@dgct.ac.in
College Hours : 9:00am - 5:00pm